“இந்த இரண்டு விடயங்களை விட்டுவிடக் கூடாது”

wp-namathulk.admin
1 Min Read

“தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் நம் வாழ்வில் எவ்வளவு நடந்தாலும் யார் நம்மைக் கீழே இறக்க நினைத்தாலும் இந்த இரண்டு விடயங்களை விட்டுவிடக் கூடாது என  சனிக்கிழமை (11) மதுரையில் இடம்பெற்ற   கூட்டம் ஒன்றில் நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

திரைப்படங்களில் நடிப்பது மற்றும் தயாரிப்பது மட்டுமில்லாமல் பிசினஸிலும் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. அதில் அவர் முதலீடு செய்திருக்கும் ஃபெமி 9 நாப்கின் நிறுவனமும் ஒன்று. இதன் 2025ஆம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வு, வினியோகஸ்தர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றுள்ளது.

இதில் நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ்சிவனுடன் கலந்து கொண்டுள்ளார்.

இவ் விழாவில் நயன்தாரா பேசியதாவது, “என் வாழ்க்கையில் நான் நம்புகிற இரண்டு விஷயங்கள் உண்டு. தன்னம்பிக்கையும் சுயமரியாதையும்! நம் வாழ்வில் எவ்வளவு நடந்தாலும் யார் நம்மை கீழே இறக்க நினைத்தாலும் இந்த இரண்டு விடயங்களை விட்டுவிடக்கூடாது.

இதை நாம் கடைபிடித்தால் வாழ்க்கை அழகாக மாறிவிடும். நமக்கு நம்மேல் தன்னம்பிக்கையும், மரியாதையும் இருந்தால் அதற்கு மேல் வேறு எந்த விஷயமும் கிடையாது.

இந்த தன்னம்பிக்கை நமக்கு வரவேண்டும் என்றால் நேர்மையாக உழைக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் யார் என்ன சொன்னாலும், நம்மளை எவ்வளவு கீழ்த்தரமாக பேசினாலும், நம்மிடம் தவறாக நடந்து கொண்டாலும், நாம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உண்மையாக தொடர்ந்து உழைக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு தன்னம்பிக்கை வரும்.

இதன் மூலம் நமது வாழ்க்கையே மாறிவிடும். உண்மையும் உழைப்பும் உயிர் இருக்கும் வரை இருந்தால் நமது வாழ்க்கை வெற்றிகரமாக அமையும்” என்றார். நயன்தாராவின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் வைரலானதைத் தொடர்ந்து அவர் தனுஷூக்கு பதிலடி கொடுக்கும் விதமாகதான் பேசியிருக்கிறார் என கூறி வருகின்றனர் என்றார். (R)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *