கொமர்ஷல் வங்கி தனது வருடாந்த சிரேஷ்ட ஊழியர்களுக்கான விருது வழங்கும் விழாவில், 37 ஊழியர்களின் கடமையுணர்வையும் 25 வருட கால சேவையையும் கௌரவித்திருந்தது.
கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொமர்ஷல் வங்கியின் தவிசாளர் ஷர்ஹான் முஹ்சீன், வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க, பிரதம செயற்பாட்டு அதிகாரி எஸ். பிரபாகர், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் கூட்டாண்மை மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். விழாவைத் தொடர்ந்து நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வில் கௌரவிக்கப்பட்ட ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த விருதுகளை பெற்றவர்களில் பலர் பாடசாலை கல்வியை பூர்த்தி செய்த நிலையில் 1999 ஆம் ஆண்டு வங்கியில் இணைந்து கொண்டவர்கள் என்றும், தற்போது வங்கி மற்றும் வங்கிக் கிளைகளில் பல்வேறு துறைகளில் முக்கிய பதவிகளை வகிப்பதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் பணிப்பாளர் சபை மற்றும் கூட்டாண்மை மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவத்தின் பிரதிநிதிகளுடன் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்ட சிரேஷ்ட ஊழியர்களையும் படத்தில் காணலாம்.