இந்தோனேஷி யா – இந்தியாவுக்கிடையே பாதுகாப்பு, வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் விதமாக பிரதமர் மோடியை இந்தோனேசிய ஜனாதிபதி நேற்று (25) சந்தித்துள்ளார்.
இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியந்தோ மூன்று நாட்களுக்கான உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவுக்குச் சென்றுள்ளார்.
நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் இந்தோனேசியாவை முக்கிய பங்குதாரராகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, சர்வதேச சட்டத்திற்குட்பட்டு கடல்வழிப் போக்குவரத்து சுதந்திரமாக செயல்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என தெரிவித்தார்.
மேலும், இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டு இந்த விவகாரத்தில் உலகளாவிய நாடுகளின் அக்கறை குறித்தும் அவர் பேசியுள்ளார்.
கடல்சார் பாதுகாப்பு தொடர்பாக குற்றத் தடுப்பு, தேடுதல் மற்றும் மீட்பு, திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்தோனேசியா – இந்தியா இடையே ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. (a)