இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரரான மார்க்கஸ் றஷ்ஃபோர்ட்டின் பிரதிநிதிகளுடன் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவுக்கு செல்வது குறித்து பார்சிலோனா நேருக்கு நேர் பேச்சுக்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
றஷ்ஃபோர்ட்டை அணியில் யுனைட்டெட்டின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ருபென் அமோரிம் உள்வாங்காத நிலையில் அவரை ஏனைய அணிகள் கைச்சாத்திடக்கூடியதாகவுள்ள நிலையில் அவரைக் கடனடிப்படையில் கைச்சாத்திடும் அணியை அவரின் ஊதியத்தின் ஒரு பகுதியை செலுத்த யுனைட்டெட் வேண்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.