கொரிய நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியாவில் வணிக வாகன சந்தையில் நுழைய தயாராகி வருகிறது.
டெல்லியில் நடைபெற்றுவரும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025-ல் Hyundai நிறுவனம் E3W மற்றும் E4W கான்செப்ட் மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் ‘மனிதநேயத்திற்கான முன்னேற்றம்’ என்ற தொலைநோக்கு பார்வையின் கீழ் இந்த மாடல்களை தயாரித்துள்ளது.
அவை வணிகத் துறையில் intra-city mobility மற்றும் last-mile mobility solutions-க்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதற்காக ஹூண்டாய் நிறுவனம் டிவிஎஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது, இந்திய இருசக்கர வாகன உற்பத்தியாளரான TVS Motor மோட்டார் உடன் ஹூண்டாய் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது.

இந்த கூட்டணியின் கீழ், இரு நிறுவனங்களும் கூட்டாக மின்சார மூன்று சக்கர வாகனம் (E3W) மற்றும் மைக்ரோ 4-சக்கர (E4W) வாகனங்களை உருவாக்கும்.
இருப்பினும், இரு நிறுவனங்களுக்கும் இடையிலான கூட்டாண்மைக்கான எந்த ஆவணங்களும் இதுவரை கையெழுத்திடப்படவில்லை.
இந்த இரு நிறுவனங்களும் தற்போது வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டை ஹூண்டாய் கையாளும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகின்றன, அதே நேரத்தில் டிவிஎஸ் உற்பத்தி மற்றும் விநியோகத்தை நிர்வகிக்கிறது.