64 பயணிகளை ஏற்றி வோஷிங்டன் நோக்கி சென்ற உள்ளூர் விமானம் மீது அமெரிக்க இராணுவத்தினரின் பயிற்சி ஹெலிகொப்டர் மோதி நேற்றிரவு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானமும், ஹெலிகொப்டரும் பொடோமேக் ( Potomac ) ஆற்றில் வீழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .
குறித்த பயணிகள் விமானத்தில் 64 பயணிகளும், இரண்டு விமானியும், விமான பணியாளர்களும் இருந்துள்ளனர்.
விபத்து இடம்பெறுவதற்கு முன்னர், அருகிலிருந்த விமான நிலையத்தின் கட்டுப்பாட்டாளரால் பயிற்சியில் ஈடுபட்ட ஹெலிகொப்டருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்ட போதிலும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது.