ராஜபக்ச குடும்பத்தினரை பழிவாங்கும் நோக்குடன் தற்போதைய அரசாங்கம் செயற்படுவதாக தமது X தளத்தில் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
‘கிரிஷ் நிறுவனம் தொடர்பான வழக்கு தொடர்பாக சட்டமா அதிபர் தம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த விடயம் தொடர்பில், 08ஆண்டுகளின் பின்னர் தற்போதைய அரசாங்கம் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளதாகவும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்
ராஜபக்ச குடும்பத்தினர் மீது தாக்குதல்களை மேற்கொல்வதனூடாக, அரசாங்கம் தங்களுடைய தோல்விகளை நீண்ட காலத்திற்கு மறைக்க முடியாது.’ என நாமல் ராஜபக்ச தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்