தற்பொழுது அரச சேவையிலுள்ள தரவுகளின் அடிப்படையில் சரியான தீர்மானங்களை எடுப்பதற்கான சிக்கல் நிலை காணப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார் .
இதனால் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் சரியான தரவு கட்டமைப்பொன்று நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அநுராதபுர மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே ஜனாதிபதி இவற்றை குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள அரச சேவையில் பிரஜைகள் திருப்பதியடையவில்லை எனவும் அரசாங்க சேவையை டிஜிட்டல் மயமாக்குவதன் ஊடாக பிரஜைகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்க முடியும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் .
அத்துடன், அரச ஊழியர்களுக்கு நியாயமான அடிப்படை சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் சம்பள முரண்பாடுகளை 03 வருடங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பான முன்மொழிவுகள் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.


