காஸாவில் சிறைப்பிடிக்கப்பட்ட 08 பேரை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
மூன்று இஸ்ரேலியர்களும், ஐந்து தாய்லாந்து பிரஜைகளுமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
30 குழந்தைகள் உட்பட 110 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை நகரமான தம்முனில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் குறைந்தது 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .