கிளிநொச்சி பெரியகுளத்தில் பாய்ந்த இளைஞனொருவர் பல மணிநேர தேடுதலின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
மது போதையில் இருந்த குறித்த நபர் குளத்தில் பாய்ந்ததும் சிலர் அவரை காப்பாற்றியுள்ளனர்.
எனினும் குறித்த நபர் மீண்டும் குளத்தில் பாய்ந்து காணாமல் போனதாக பொலிசார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி பெரியகுளம் பகுதியை சேர்ந்த 33 வயதான கணேசமூர்த்தி ரமேஷ் என்பவரே குளத்தில் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
