ஹட்டன் கொட்டகலை மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் பொது முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் ஆகியோரால் தாக்கப்பட்டுள்ள தோட்ட வெளிக்கள உதவி உத்தியோகத்தர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினால் தொழிற்சாலைக்கு அருகில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு தெரியப்படுத்தப்படும் என இதன்போது கூறப்பட்டுள்ளது.
பொது முகாமையாளரும், உதவி முகாமையாளரும் இணைந்து கடந்த 23ஆம் திகதி தாக்குதலை நடாத்தியுள்ளனர்.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட உதவி வெளிக்கள உத்தியோகத்தர்கள் இருவரும் கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நான்கு நாட்கள் கடந்தும், பொலிஸார் மந்த கதியிலேயே செயல்பட்டுள்ளதாக தொட்ட மக்கள் கூறியுள்ளனர்.
பொதுமுகாமையாளர் தலைமறைவாகி இருப்பதற்கு பொலிஸார் உடந்தையாக இருந்தனரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
