அடுத்த சில வாரங்களில் நெல்லிற்கான நிர்ணய விலை தீர்மானிக்கப்பட்டு,கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களினால் நெல் கொள்வனவு செய்யப்படுமென கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.
வவுனியாவில் ஒருங்கிணைப்புக் குழு அலுவலக திறப்பு விழா பின்னர் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பெரும்போக நெல் அறுவடை இடம்பெறும் நிலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நெல்கொள்வனவு குறித்து விவசாயிகளுக்கு திருப்தியற்ற நிலை உள்ள போதிலும்,இது குறித்து விவசாயிகள் கவலையடைத் தேவையில்லை என பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
நெல்லுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்யப்பட்டு ,விவசாயிகளிடமிருந்து பெருமளவு நெல் கொள்வனவு செய்யப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.