படையினரின் வசமுள்ள காணிகளின் விபரங்களை தம்மிடம் ஒப்படைத்தால் குறித்த காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
கடந்த காலத்தில் இராணுவத்தினர் வசமான பொதுமக்களின் காணிகள் தற்போதைய அரசாங்கம் விடுவித்து வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் இராணுவத்தினால் விடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகளின் விபரங்களை தந்துதவும் பட்சத்தில்
அவற்றை விரைவில் விடுவித்து பொதுமக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்