மன்னார் பேசாலை பகுதியில் பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், 27 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்பின் ஒரு கட்டமாக இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்போது சந்தேகநபரின் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பேசாலை பகுதியை சேர்ந்த 25 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
