ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றினால் பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்களோடு இணைந்ததாக கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற அமர்வு நேற்றைய தினம் (28) ஜனாதிபதி செயலக பழைய பாராளுமன்ற சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, கொழும்பு சிறிமாவோ கல்லூரியின் மாணவ பாராளுமன்ற உறுப்பினர்கள் க்ளீன் சிறிலங்கா திட்டத்தின் கருத்தியல் பெறுமதிகள் அதன் நடைமுறை முக்கியத்துவத்தை அறிந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததோடு, மாணவ பாராளுமன்றத்தில் இத்திட்டத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஒருவரும் நியமிக்கப்பட்டார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, இலங்கை பாராளுமன்றத்தின் சட்ட சேவைகள் மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் ஜயலத் பெரேரா ஆகியோர் கலந்துக் கொண்டு மாணவ பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்