இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் காலஞ்சென்ற மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காலஞ்சென்ற மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் அரசடி வீதி, மாவிட்டபுரம், தெல்லிப்பளையிலுள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் இன்று முற்பகல் அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் உள்ளிட்ட தமிழரசு கட்சியின் பிரமுகர்களும் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை இந்திய துணை தூதுவர் சாய் முரளி உள்ளிட்ட குழுவினரும் இன்று அன்னாரின் இல்லத்திற்கு சென்று தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
இந்நிலையில் அன்னாரின் இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
திடீர் சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாவை சேனாதிராஜா நேற்றிரவு (29) உயிரிழந்தார்.