யாழ் . வல்வெட்டித்துறை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த 13 தமிழக மீனவர்கள் கைது….

wp-namathulk.admin
0 Min Read

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர் .

இதன்போது குழுவாக இணைந்து இலங்கை கடற்படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ள தமிழக மீனவர்கள் முயற்சித்துள்ளனர்.

பதில் தாக்குதலின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் தமிழக மீனவர்கள் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் தெரிவித்தார் .

காயமடைந்த இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

காயமடைந்தவர்கள் அடங்கலாக 13 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *