ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், விமானப்படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கான நியமன கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
ஜனவரி 29ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது .
விமானப்படையின் 20ஆவது தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
