அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானுக்கு அண்மையில் குடியேறிய ஒருவர் தனது மகளை சுட்டு கொலை செய்துள்ளார்.
மகளின் TikTok வீடியோக்களை விரும்பாத நிலையில் அவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அடையாளம் தெரியாதவர்களால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தனது மகளை தானே சுட்டுக் கொன்றதாக விசாரணைகளின் போது குறித்த தந்தை தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.