இலங்கை கல்வி நிர்வாக சேவையின் விசேட தரப் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு, தகுதி பெற்ற அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளவதற்கான இறுதித் திகதி 20.02.2025 என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, விண்ணப்பதாரிகளுக்கான தகுதி நிலைகளாக பின்வரும் தரநிலைகள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன.
நிர்வாக சேவை பிரிவின் தரம் I இல் ஐந்து ஆண்டுகள் திருப்திகரமான சேவையை முடித்திருக்க வேண்டும்.
ஒழுக்காற்று தண்டணைக்கு உட்படுத்தப்படாமல் இருக்க வேண்டும்.
பல்கலைக்கழக ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நிர்வாக சேவைப் பிரிவில் பதினெட்டு (18) ஆண்டுகளுக்குக் குறையாமல் பணியாற்றியிருக்க வேண்டும்.
திறன் மேம்பாட்டு பயிற்சி பாடநெறியை நிறைவு செய்திருத்தல்.