ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர்கள் படுகொலை ஆகியவற்றை சுட்டிக்காட்டி அனுஸ்டிக்கப்பட்டுவரும் கறுப்பு ஜனவரியை நினைவுக்கூறும் வகையில் இத்தீப்பந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது
ஊடவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்பினர், மதத் தலைவர்கள் ஒன்றினைந்து தீப்பந்தங்களை ஏந்தியவாறு மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நேற்று மாலை ஆர்ப்பாட்தத்தை முன்னெடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து தீப்பந்தம் ஏந்தியவாறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் நீதி கோரிய ஆர்ப்பாட்டத்தினை நடாத்தினர் .

