மத்தேகொட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் புதிய பொறியியல் பீடத்திற்கான கட்டடத் தொகுதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது நிர்மாணப் பணிகளை விரைவுப்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பிரதமர் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
அத்துடன், பல்கலைக்கழக கட்டமைப்பில் தற்போது காணப்படும் விரிவுரையாளர்களின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
மேலும், பல்கலைக்கழகத்தின் ஆய்வு நடவடிக்கைகளுக்காக அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்