சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வுகளை வழங்கி, வினைத் திறனான சேவையாக முன்னோக்கிக் கொண்டுச்செல்ல திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ராஜகிரியில் அமைந்துள்ள சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை மத்திய நிலையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவையின் தற்போதைய செயற்பாடுகளை அமைச்சர் மேற்பார்வை செய்தார்