போக்குவரத்துப் பிரச்சினைகளை கட்டமைப்பு ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் தீர்க்க முடிவுகள் எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் அதிகாரிகள் மற்றும் ஏனைய ஊழியர்களை நேற்று சந்தித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
பயணிகளின் பிரச்சினைகள், அனுமதிப்பத்திர சிக்கல்கள், பணியாளர் பிரச்சினைகள், அனுமதி சிக்கல்கள், நிறுவனங்களுக்கு வருமானம் பகிர்ந்தளிப்பதில் உள்ள சிக்கல்கள், பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்களில் மேலதிக அலங்கார சிக்கல்கள், ஆசனப்பட்டி அணிவது மற்றும் விபத்துக்கள் போன்ற பல பிரச்சினைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.