வடக்கில் காணி பிரச்சினையை மீளாய்வு செய்து மக்களுக்கான காணிகளை மீள வழங்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் என ஜனாதிபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்ட விசேட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துக் கொண்ட போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார் .
யாழ்ப்பாண மக்களுக்கான மிகவும் பயனுள்ள திட்டமொன்றிற்காக யாழ். ஜனாதிபதி மாளிகையை முழுமையாக விடுவிக்க தயாராக உள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார் .
அத்துடன் பொலிஸ் திணைக்களத்தில் காணப்படும் வெற்றிடங்களுக்கு தமிழ் பேசும் இளைஞர், யுவதிகளுக்கு அதிக வாய்ப்பை வழங்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
பரந்தன்,மாங்குளம் மற்றும் காங்கேசன்துறை பிரதேசங்களில் புதிய தொழிற்சாலைகளை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அரசியல் அதிகார தரப்பும், அரச பொறிமுறையும் இணைந்து செயல்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி வடமாகாண கிராமிய வீதி அபிவிருத்திக்கு வரவு செலவுத் திட்டத்தில் 5 பில்லியன் ரூபா விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட விசேட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றிய முழுமையான காணொளியை நமது ரி.வி YOUTUBE தளத்தில் பார்வையிட முடியும்.