மன்னார் மாவட்டத்திலுள்ள பல தேசியப் பாடசாலைகள் வளப்பற்றாக்குறையுடன் இயங்கிவரும் நிலையில்,குறித்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படுமென
தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்திலுள்ள தேசியப் பாடசாலைகளுக்கு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் ஆகியோர் விஜயம் செய்து
பாடசாலைகளின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
பல தேசியப் பாடசாலைகளிலும் ஆசிரியர் ஆளணி பற்றாக்குறையாகவுள்ளதுடன், சில உயர்தர மாணவர்கள் தாம் கற்கும் பாடங்களுக்கு ஆசிரியர் இன்மையால் வேறு பாடசாலைகளில் சென்று
கற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரைடி,விரைவாக தீர்வு வழங்கப்படுமென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.