அமரர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.
மாவிட்டப்புரத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்திற்கு இன்று பகல் சென்று மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி, அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் அனுதாபங்களை கூறினார்.
போக்குவரத்து, பெருந்தெருக்கல்,துறைமுகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்டவர்களும் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்