முல்லைத்தீவு மாங்குளம் வசந்தநகர் பகுதியில் தந்தை ஒருவரால் மகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
08 வயதான தனது மகளை 33 வயதான தந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் .
சிறுமியின் பாட்டி செய்த முறைப்பாட்டிற்கு அமைய , சிறுமி மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
சந்தேகநபரான சிறுமியின் தந்தை இதுவரை கைது செய்யப்படவில்லை.
மாங்குளம் பொலிசார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.