யாழ்ப்பாணம் மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையின் ‘செயற்பட்டு மகிழ்வோம்’ நிகழ்வு,பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நேற்று(30) வியாழக்கிழமை இடம்பெற்றது.
பாடசாலையில் முதல்வர் க.இளங்கோவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வள்ளுவன், கம்பன், இளங்கோ ஆகிய இல்லங்களின் அணி வகுப்பு மரியாதை இடம்பெற்றதுடன்
இடைவேளை நிகழ்வான ‘இசையும் அசைவும்’ நிகழ்வு சபையோரைக் கவர்ந்தது.
நிகழ்வில்,வள்ளுவன் இல்லம் மூன்றாம் இடத்தையும், கம்பன் இல்லம் இரண்டாம்,இடத்தையும் இளங்கோ இல்லம் முதலாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.