வாகான இறக்குமதிக்கு அனுமதி வழங்கி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் கார்கள், வேன்கள், பேருந்துகள், பொருட்களை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனங்கள், விசேட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் இயந்திரங்களைப் பயன்படுத்தாத பிற பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நடைமுறையில் இருந்த தற்காலிக இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக 304 ஒருங்கிணைந்த வகைப்பாடு குறியீடுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்ய இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ், 2025 ஜனவரி 31 ஆம் திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானியில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இயல்பான பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு 09 நிபந்தனைகளையும் அறிவித்துள்ளது.
