ஹபரணை , திருகோணமலை வீதியில் கல்வங்குவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் மேலும் 35 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கிண்ணியாவை சேர்ந்த 32 வயதான இளைஞனும் , ஹிக்கடுவ பகுதியை சேர்ந்த 66 வயதான பெண்ணொருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
தனியார் பஸ் ஒன்றும், வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இன்று காலை விபத்து இடம்பெற்றுள்ளது.

