மக்களுக்கு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களை சிறப்பான தரத்தில் வழங்குவதை இலக்காகக் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, ஆயுர்வேத மருந்துகள் மற்றும் தயாரிப்புகள் ஒழுங்குமுறை சபையின் புதிய உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஆயுர்வேத மருந்துகள் மற்றும் பொருட்கள் ஒழுங்குமுறை சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வின் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்
இதன்போது, ஆயுர்வேத துறையின் ஒழுங்குமுறை பொறுப்பிலிருந்து விலகியிருக்கும் போது தரமான மற்றும் உயர்தர பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதில்லை எனேவும் தற்போது அது குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது என தெரிவித்தார்.
அத்துடன், உள்ளூர் மருத்துவ முறையை நன்கு மேம்படுத்தி எதிர்கால இலக்குகளில் அந்த மருத்துவ முறை தொடர்பான தனித்தன்மைகளை அடையாளம் கண்டு அந்தத் தனித்தன்மைகளை சுற்றுலா வணிகத்துடன் இணைத்து சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், மேற்கத்திய மற்றும் ஆயுர்வேத மருத்துவமனை அமைப்புகளை ஒன்றிணைக்கும் போது சுற்றுலாப் பகுதிகளில் மனித மற்றும் பௌதீக வசதிகளை துரிதமாக அபிவிருத்தி செய்யுமாறு அரசாங்கம் கோருகவதாகவும் வலியுறுத்தினார்.