நாட்டின் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகளில் முதலீடு செய்ய ஐக்கிய அரபு இராச்சியம் ஆர்வம் தெரிவித்துள்ளதாக இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் அல் அமேரி குறிப்பிட்டார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் அல் அமேரி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது, துறைமுக நகரத்தில் கட்டப்படக்கூடிய விமான நிலைய முனையத்தில் முதலீடு செய்வதற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.