யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் வெண்புரவி புனித அந்தோனியார் கடற்றொழில் கிராமிய அமைப்பின் ஏற்பாட்டில் , அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனை வரவேற்கும் நிகழ்வு நேற்று (02)நடைபெற்றது.
குறித்த பகுதியில் கடலரிப்பை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், மீனவர்கள் இளைப்பாறுவதற்கான தங்குமிடத்தை அமைக்க வேண்டுமெனவும் கடற்றொழிலாளர்கள் விடுத்த வேண்டுகோளை நிறைவேற்றுவதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.
அத்துடன் இலங்கையின் கடல்வளத்தை பாதுகாப்பதற்கான உரிய பொறிமுறை விரைவில் உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Link : https://namathulk.com