சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை, உறவினர்கள் பார்வையிடுவதற்கான விசேட ஏற்பாடுகளை சிறைச்சாலை திணைக்களம் மேற்கொண்டுள்ளது
இதன்படி, உறவினர்களினால் கொண்டுவரப்படும் உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களை கைதிகளுக்கு பெற்றுக் கொடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் காமினி பீ. திசாநாயக தெரிவித்தார்.
மேலும், சுகாதரா நெறிமுறைகளுக்கமைய உறவினர்களால் கொண்டுவரப்படும் உணவை கைதிகளுக்கு வழங்க வழங்குவதற்கான அறிவுரைகள் அனைத்து சிறைச்சாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.