ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவர்களில் மூன்று வேட்பாளர்கள் உட்பட 13 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரேரணை சபாநாயகரிடம் வழங்கப்பட்டு, பிரதேச சபைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களைப் பின்பற்றி தேர்தலை நடாத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
அத்துடன், பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக 1064 நபர்கள் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

Link: https:llnamathulk.com