பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர்கள் எதிர்வரும் 5 ஆம் திகதிக்குள் விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
250இற்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலை மாணவர்களுக்கே இச்சலுகை வழங்கப்படவுள்ளது.
அத்துடன், 250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில், அஸ்வெசும நிவாரண சலுகைக்கு தகுதியற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கான ரூ.6,000 உதவித் தொகையை 5 ஆம் திகதிக்குள் வழங்க திட்டமிட்டுள்ளது.