அரிசிக்கான தற்போதைய கட்டுப்பாட்டு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என, நெல் சந்தைப்படுத்தல் சபை இன்று காலை நெல்லுக்கான உத்தரவாத விலையை அறிவித்ததாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்படி, ஒரு கிலோ நாட்டு நெல்லுக்கு ரூ.120, ஒரு கிலோ சம்பா நெல்லுக்கு ரூ.125 மற்றும் ஒரு கிலோ கீரி சம்பா நெல்லுக்கு ரூ.132 என உத்தரவாத விலை அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன், இந்த விலைகளில் தரப்படுத்தப்பட்ட நெல்லை வாங்கும் திறன் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கே உள்ளது என்றும், விவசாயி அந்த விலையை விட அதிக விலைக்கு நெல்லை விற்க முடியும் என்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.
Link: https://namathulk.com