கல்முனையில் 11 கிலோ கேரள கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த இரு வியாபாரிகள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்முனை விசேட அதிரடிப் படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரசகிய தகவலுக்கமைய இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, கைது செய்யப்பட்ட இருவரும் 54 மற்றும் 62 வயது மதிக்கத்தக்கவர்கள் என்பதுடன், நீண்ட காலமாக கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை உள்ளிட்ட பகுதிகளில் கேரளா கஞ்சாவை விற்பனை செய்து வந்துள்ளனர்.
அத்துடன், சந்தேகநபர்களிடமிருந்து 7 கிலோ மற்றும் 4 கிலோ கேரள கஞ்சா பொதிகளும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் ஒரு தொகை பணமும் மீட்கப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
Link : https://namathulk.com