நோய்களைத் தடுப்பதில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருந்தாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
காலி, கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருத்துவப் பிரிவின் திறப்பு விழாவின் போதே அவர் இதனை குருப்பிட்டார்.
கடந்த ஆண்டு மருத்துவ விநியோகப் பிரிவு மூலம் அரச வைத்தியசாலைகளுக்கு இன்சுலின் உள்ளிட்ட நீரிழிவு தொடர்பான மருந்துகளை வழங்குவதற்காக சுமார் 7, 300 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த நிதி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சிகிச்சை சேவைகளுக்கான மருந்துகளை வாங்குவதற்கு திறைசேரி வழங்கும் பணத்தைப் பயன்படுத்த திட்டமிடுவதற்குப் பதிலாக, முடிந்தவரை நோய் தடுப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.
Link : https://namathulk.com