காலி காலி ஹினிதும பகுதியில் கடந்த 30 ஆம் திகதி துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தி மூன்று பேரை கொலை செய்தமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்கெதர பகுதியை சேர்ந்த 47 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
காலி பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஹினிதும பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Link : https://namathulk.com