கிளிநொச்சி இரணைதீவு கடலில் மூன்று படகுகளுடன் கடந்த 26ஆம் திகதி கைதான 19 இந்திய மீனவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபா அபாதம் விதித்து
கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இரணைதீவை அண்மித்த கடற்பரப்பில் கடந்த ஜனவரி 26ஆம் திகதி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று இந்திய இழுவைப்படகுகளுடன்
அதிலிருந்த 34 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இவ்வாறு கைதாகி விளக்கமறியலில் இருந்த 34 மீனவர்களுக்கு எதிரான வழக்கு,கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் இரண்டு படகுகளில் பயணித்த 19 மீனவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபா அபராதம் விதித்து விடுதலை செய்ததுடன், செலுத்த தவறின் பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத கால சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதேவேளை ஏனைய 15 மீனவர்கள் பயணித்த மற்றைய படகின் பதிவு இலக்கம் வேறுபட்டுள்ள நிலையில், குறித்த படகு தொடர்பான வழக்கு எதிர்வரும் 10அம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Link : https://namathulk.com
