கொலன்னாவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வழங்கப்பட்ட சிபாரிசு அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தி, அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார்.
கொலன்னாவை வெள்ளத்தினைக் கட்டுப்படுத்துவதற்காக சிபாரிசுகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு முன்வைத்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட சிபரிசுகள் மற்றும் அதற்கு இணங்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது, அடுத்த கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அச்செயற்பாடுகள் மற்றும் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தியதன் முன்னேற்றம் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்குமாறு பிரதமரினால் அதிகாரிகளுக்கு பணிபுரை வழங்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாரச்சி மற்றும் கொலன்னாவை ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர், இளைஞர் அலுவல்கள் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர ஆகியோர் கலந்துரையாடினார்.
Link : https://namathulk.com