சீனா மற்றும் ஹொங்கொங்கில் இருந்து பொதிகளை ஏற்றுக்கொள்வதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக அமெரிக்க தபால் சேவை (USPS) தெரிவித்துள்ளது.
எனினும் கடித சேவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் கிடைக்கும் வரை இந்த அறிவித்தல் அமுலில் காணப்படும் என அமெரிக்க தபால் சேவை (USPS) தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் இதுவரை எவ்வித தவல்களும் வழங்கப்படவில்லை .
சீன இறக்குமதி பொருட்களுக்கு 10 வீத மேலதிக வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு விடுத்துள்ள நிலையில் இந்த செயற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
Link : https://namathulk.com