அம்பலாந்தோட்டை, ருஹுனு ரிதியகம பகுதியில் தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்தி படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மகன் போதைப்பொருள் வாங்குவதற்கு தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வீட்டில் இருந்த தொலைக்காட்சியை விற்பனை செய்ய முயற்சித்த போது ஏற்பட்ட வாக்குவாதத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் கூறினார்.
இதனையடுத்து, காயமடைந்த இருவரும் அம்பலாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Link : https://namathulk.com