மக்களின் எண்ணங்களிலும்,நடத்தைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதே தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் இலக்காகுமென வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் வடக்கு மாகாணத்திற்கான ஆரம்ப நிகழ்வு யாழ்.மாநகர எல்லைக்குட்பட்ட திருநகரில் நடைபெற்ற போதே அளுநர் இவ்வாறு கூறினார் .
1970 களில் இலங்கையின் தூய்மையான மாவட்டமாக இருந்த யாழ்ப்பாணத்தின் நிலை இன்று தலைகீழாகமாறிவிட்டதாக குறிப்பிட்ட ஆளுநர், இதற்கு பிளாஸ்ரிக் பொலித்தீன் பாவனை அதிகரித்துள்ளமையே காரணமென சுட்டிக்காட்டினார்.
குப்பைகளுடன் பிளாஸ்ரிக்,பொலித்தீன்களை எரிக்கும் போது அதிலிருந்து வெளியேறும் புகையே புற்றுநோய்க்கான மூலகாரணி என சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர், நோய்களுடன் வாழ்வதா அல்லது ஆரோக்கியமான சமூகமாக வாழ்வதா என ஒவ்வொருவரும் தீர்மானிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
Link : https://namathulk.com