மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் திடீர் விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான
கட்டுமானத்திற்கும், மருத்துவ உபகரணங்களை வழங்கவும் இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது.
இந்த திட்டத்திற்காக 600 மில்லியன் இலங்கை ரூபாவை இந்திய அரசாங்கம் நன்கொடையாக வழங்கவுள்ளது.
இந்த திட்டத்தை செயற்படுத்தும் நோக்கில் இலங்கை- இந்தியா அரசாங்கங்களுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படுமெனவும், இந்த ஒப்பந்தத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Link : https://namathulk.com