மன்னார், விடத்தல்தீவு காட்டுப்பகுதியிலிருந்து 28 கிலோ கேரள கஞ்சா பொலிசாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விடத்தல்தீவு காட்டுப்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 13 கேரள கஞ்சா மூடைகள் மீட்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா 42 இலட்சம் ரூபா பெறுமதியானவை என பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு, பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link : https://namathulk.com