யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் பல்கலைக்கழக பட்டப்படிப்பை நிறைவு செய்தவர் என்றும், இரண்டு வருடங்களாக வேலை கிடைக்காத காரணத்தால் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியை சேர்ந்த தங்கவேல் விபுசனன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Link: https://namathulk.com