அரச ஆவணங்கள் மற்றும் ரகசிய தன்மையை பாதுகாக்கும் நோக்கில் உத்தியோகபூர்வ செயற்பாடுகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டாம் என இந்திய நிதி அமைச்சு தனது ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.
அந்தவகையில் ChatGPT, DeepSeek போன்ற AI தொழில்நுட்ப பயன்பாடுகளை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் தரவு பாதுகாப்பு அபாயங்களை மேற்கோள்காட்டி செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com